"கோவை வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டமா?" - இந்து முன்னணி மாநில தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

x

கோவை, திருப்பூர் வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் இருப்பதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து முன்னணியின் திருப்பூர் கோட்ட பொதுக்குழு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் நிருபர்களிடம் பேசிய அவர், நக்சல்கள் தொழில் நகரங்களின் வளர்ச்சிக்கு இடையூராக இருப்பதாகவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினார். கோவை, திருப்பூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நக்சல்கள் இருப்பதாக கூறிய அவர், உளவுத்துறை கண்காணிக்க வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்