கலிபோர்னியாவைக் கலங்கடித்த கனமழை... - நகரங்களைச் சுற்றி வளைத்த வெள்ளம்

x

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைக் கனமழை கலங்கடித்தது.

பனிப்புயல் பாதிப்பில் இருந்தே மீளாத மக்களுக்கு மேலும் ஓர் பேரிடியாக இறங்கியுள்ளது கனமழை...

வடக்கு கலிபோர்னியாவில் உள்ள அலமெடா நகரில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், நகரைச் சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது...

மரங்கள் முறிந்து விழுந்ததால் சாலைகள் முடக்கப்பட்டன... பல பகுதிகளில் நிலச்சரிவுகளும், சாலைகளில் திடீர் பள்ளங்களும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளேசர்வில்லேவில் பெய்த பேய் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்