ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்.. உடல் தகுதி சான்றிதழ் பணி தீவிரம்

x

பொங்கல் பண்டிகையின் போது அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.

இந்நிலையில், போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடைத்துறை சார்பில் உடல் தகுதி சான்றிதழ் வழங்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

அப்போது, காளைகளுடன் வந்த உரிமையாளர்கள் தங்களது மாடுகளை பரிசோதனை செய்து உடல் தகுதி சான்றிதழை பெற்றுச் சென்றனர்.

இதனிடையே, போட்டிக்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் கிராம மக்கள் தயார் செய்து வரும் நிலையில், மாட்டின் உரிமையாளர்கள் காளைகளை தயார் செய்து உடல் தகுதி சான்றிதழ் பெறும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்