கனமழையால் உடைந்த பாலம்... சொந்த செலவில் மீனவர்கள் எடுத்த முடிவு

x

மயிலாடுதுறை, சீர்காழியில் பெய்த கனமழையில் உடைந்த தற்காலிக பாலத்தை, அப்பகுதி மக்களே சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர். சீர்காழி அருகே கொட்டாயமேடு கிராமத்தையும், மீனவர்கள் தங்கி இருக்கும் சுனாமி குடியிருப்பு பகுதியையும் இணைக்கும், இணைப்பு பாலத்தின் கட்டுமான நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடியும் வரை பயன்படுத்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சீர்காழியில் பெய்த கனமழையால் தற்காலிக பாலம் உடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இது குறித்து தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மீனவ மக்களே சொந்த செலவில் பாலத்தை சீரமைத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்