பாஜக Vs பி.ஆர்.எஸ் மோதல்... துவங்கியது புதிய போஸ்டர் யுத்தம்... பி.எல்.சந்தோஷை வம்புக்கு இழுத்த சந்திரசேகர்ராவ் மகள்

x
  • தெலங்கானா மாநிலத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷை தேடப்படும் நபராக அறிவித்து ஐதராபாத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
  • அந்த மாநில முதலமைச்சரும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவிடம், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
  • இந்த வழக்கு தொடர்பாக, இன்று மீண்டும் அவரிடம் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இந்த போஸ்டர் யுத்தம் மீண்டும் தொடங்கியுள்ளது.
  • அதில், பி.எல்.சந்தோஷ், அரசியல் தரகர் என்றும், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதில் திறமையானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்