நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் திட்டம்... "திமுகவினர் இப்போதே தயாராக வேண்டும்" - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு

x

தேசிய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றினையும் முன்பாக நாடாளுமன்ற தேர்தலை 6 மாதத்திற்கு முன் நடத்த பா.ஜ.க. திட்டமிடலாம் என திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓராண்டு காலம் இருப்பதாக நினைக்க கூடாது என்றார். எதிர்கட்சியினர் ஒன்று சேரக்கூடும் என்பதால், 6 மாத‌த்திற்கு முன்பாகவே தேர்தலை நடத்த பாஜக திட்டமிடலாம் என பேசினார். அதனால், திமுகவினர் இப்போதே அதற்கான அமைப்புடன் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்