மத்திய பிரதேசத்தில் பெண்கள் கழிவறையை வெறும் கைகளால் தேய்த்து கழுவிய பாஜக எம்பி

x

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா, பெண்கள் கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம், ரேவா தொகுதி எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா, பள்ளியில் நடந்த மரம் நடும் விழாவில் கலந்துக் கொண்டார்.

பின்னர், பெண்கள் கழிவறைக்குச் சென்ற அவர், அங்கு அசுத்தமாக இருந்த கழிவறையை வெறும் கைகளாலேயே சுத்தம் செய்து, அங்குள்ளோரை ஆச்சர்யப்படுத்தினார்.

தூய்மை இந்தியா திட்டத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஜனார்த்தன் மிஸ்ரா, இதற்கு முன்பும் கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்