சென்னையை உலுக்கிய பாஜக பிரமுகர் கொலை - தீயாய் பரவும் நண்பர் மனைவியின் வீடியோ

x

பிபிஜிடி சங்கரின் கொலை தொடர்பாக அவரின் நண்பரின் மனைவி தூக்கணாங்குருவியின் கதையை சொல்லி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவை சேர்ந்த பிரமுகர் பிபிஜிடி சங்கர். இவர் கடந்த 27 ஆம் தேதி, சென்னை பூந்தமல்லி அருகே 10 பேர் கொண்ட கும்பலால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பி.பி.ஜி. குமரன் கொலை செய்யப்பட்ட பாணியிலேயே பிபிஜிடி சங்கரும் கொலை செய்யப்பட்டார். பிபிஜிடி சங்கர் கொலை வழக்கு தொடர்பாக 9 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், பி.பி.ஜி. குமரனின் மனைவி பிரசிதா வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்