நடுக்கடலில் புயலில் சிக்கிய வங்கதேச மீனவர்கள் - பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை

x

சிட்ராங் புயலின் போது கடலில் படகில் தவித்த வங்கதேச மீனவர்களை இந்திய கடற்படையினர் மீட்டனர். வங்கதேசத்தை சேர்ந்த 20 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது, சிட்ராங் புயல் கரையை கடந்ததால், கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைத்திரும்ப முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் கடலில் சிக்கித்தவித்த மீனவர்களை பார்த்த இந்திய கடலோரப்படையினர், அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். மீட்கப்பட்ட மீனவர்கள் பாதுகாப்பாக வங்க தேசத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்