பேபி பியூட்டி பார்லருக்கு ஃபயர் வைத்த புஷ்பா கேங்.. கோளாறு தம்பியால் வந்த வினை.. பரபரப்பு காட்சிகள்

x

ஓசூரில் கடனை திருப்பி தராததால் பியூட்டி பார்லருக்கு தீ வைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர் அருகே சந்தாபுரத்தை சேர்ந்தவர் பேபி ராணி. இவர் அதே பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இவரின் தோழியான புஷ்பாவும், சிவக்குமார் என்பவரும் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் நடத்தி வந்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து பேபி ராணியின் சகோதரர் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,, கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது பேபி ராணியின் சகோதரருக்கும், புஷ்பா தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த புஷ்பா தரப்பினர், பேபி ராணியின் பியூட்டி பார்லருக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் சிசிடிவி காட்சிகளும் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.


Next Story

மேலும் செய்திகள்