ஐயப்பன் கோவில் குடமுழக்கு விழா - சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்

x

திருச்சிற்றம்பலம் ஐயப்பன் கோவில் குடமுழக்கு விழாவில், மத நல்லிணக்க அடையாளமாக, இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் ஐயப்பன் கோவில் குடமுழக்கு பணிகள் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வந்தது. இதனிடையே பணிகள் நிறைவடைந்த நிலையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழக்கு விழா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே, பூஜைக்கு தேவையான பொருட்களை, இஸ்லாமியர்கள் சீர்வரிசையாக எடுத்து வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்