காவல்துறை சார்பு ஆய்வாளரை வெட்ட முயற்சி...மதுரையில் பரபரப்பு...

x

மதுரை காவல்துறை சார்பு ஆய்வாளரை, பெட்ரோல் குண்டுவீசி மற்றும் அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான கூல்மணி என்கிற மணிகண்டன் மீது, தெப்பக்குளம் காவல்நிலை சரா்பு ஆய்வாளர் அழகுமுத்து என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதனிடையே, சார்பு ஆய்வாளர் அழகுமுத்து, மதுரை SS காலனி காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அழகுமுத்து, சக காவலர்களுடன், மதுரை மாடக்குளம் பகுதியில் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை சார்பு ஆய்வாளர் அழகுமுத்து மடக்கியபோது, காரினுள் இருந்தது பிரபல ரவுடி கூல்மணி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து காரை நிறுத்தி விசாரித்தபோது, திடீரென, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சார்பு ஆய்வாளர் அழகுமுத்துவை கூல்மணி வெட்ட முயன்றுள்ளார்.

அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விரட்டியபோது, பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

பின்னர் ரவுடி கூல்மணியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்