கோயில் நிலத்தால் நடந்த கொடூரம்...கண்ணில் மிளகாய் பொடி கொட்டி கொலை...

x

ஓசூர் அருகே கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதில் இடையூறு செய்த விவசாயியை, கண்ணில் மிளகாய் பொடி தூவி கொலை செய்த வழக்கில் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள ஜூஜூவாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன். 52 வயது விவசாயியான இவருக்கு, திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ள நிலையில், இருவரும் பெங்களூருவில் உள்ள தனியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், மனைவியுடன் சேர்ந்து மாட்டுப்பண்ணை வைத்து, மாடுகளை பராமரித்து வந்த சிவராமன், சம்பவத்தன்று மாடுகளுக்கு தேவையான தீவன புல்லை சேகரித்து தனது காரில் கொண்டு வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், காரை மறித்து, சிவராமனின் கண்களில் மிளகாய் பொடி தூவி, அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த சீனிவாஸ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவர் போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். விசாரணையில், கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், முதியவரை தனது நண்பருடன் சேர்ந்து சீனிவாஸ் கொலை செய்தது தெரியவர, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்