அமைதியை விரும்பும் நபரா நீங்கள்?...இதோ உங்களுக்கான பூலோக சொர்க்கம்

x

பறவைகளின் காதலரா நீங்கள்...? உங்களுக்காகவே காத்திருக்கிறது ஒரு தீவு... அது எங்கு இருக்கிறது?... என்ன சிறப்பு அத்தீவில்?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு பிரிட்டிஷ் பிரதேசம் தான் இந்த கோஃப் Gough தீவு... அரணாய்க் காத்து நிற்கும் கடல்... நீல வானமும், நீலக் கடலும் தான் கண்கண்ட எல்லை...

அப்பப்பா... எத்தனை வகையான பறவைகள்... பறவைகளுக்கென ஒரு தனி நாடு என்றே சொல்லலாம்... இந்த கோஃப் தீவில் சுமார் 80 லட்சம் பறவைகள் வசித்து வருகின்றதென்றால் நம்ப முடிகிறதா?...

தென்னாப்பிரிக்காவில் இருந்து 7 நாட்கள் படகில் பயணம் செய்தால் ஆப்பிரிக்க நிலப்பரப்பில் இருந்து சுமார் 1500 மைல் தொலைவில் உள்ள இத்தீவுக்கு சென்றடையலாம்...

RSPB எனும் பறவைகள் பாதுகாப்புக் குழுவானது இந்தத் தீவிலேயே 13 மாதங்கள் வரை தங்கி பணியாற்றுவதற்குத் தகுதி வாய்ந்த நபரைத் தேடிக் கொண்டிருக்கிறது... அதற்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு கூட சமீபமாகத் தான் நிறைவடைந்தது...

பறவைகளைக் கண்காணிப்பது மட்டும் தான் வேலை... அவற்றின் இருத்தலுக்கு எவ்வித ஆபத்தும் நேராத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்...

காடு மேடுகளில் அலைந்து திரிந்து அழகழகான பறவைகளுடன் உரையாடிக் கொண்டே அவற்றின் தடயங்களைத் தேடிப் பிடிக்கலாம்...

இலவச உணவு, வருடத்திற்கு 27 லட்ச ரூபாய் ஊதியம் அறிவிக்கப்பட்டாலும், இங்கு வாழ்வது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல...

கடும் குளிர் காற்று வீசும்... வானிலை மிக மோசமாக இருக்கும்... புட்டிகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு மட்டும் தான்... புதிய உணவுகளுக்கு அனுமதி கிடையாது... முக்கியமாக பல்லுயிர் பெருக்கத்திற்கு சிறிதளவு கூட சேதாரம் விளைவிக்கலாகாது... இத்தனை நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு, ஏற்ற கல்வித் தகுதி இருந்தால் அடுத்த முறை உங்களுக்குக் கூட இத்தீவில் பணியாற்ற வாய்ப்பு காத்திருக்கிறது...

பறவைகளுக்கும் சரி...அங்கு பணிபுரிபவர்களுக்கும் சரி இருக்கும் ஒரே பிரச்சினை எலித்தொல்லை மட்டும் தான்... தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டும் கூட இந்த எலிகளால் இறந்து போன பறவைகள் ஏராளம்... ஒன்றுமறியா பறவைகளை இரவு நேரங்களில் கடித்துக் குதறி வேட்டையாடி தங்களுக்கு இரையாக்கிக் கொண்டது இந்த எலிப்படை...


Next Story

மேலும் செய்திகள்