ஆத்திரமடைந்த வியாபாரிகள் | கார் டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்

x

ராஜஸ்தானில் விபத்தை ஏற்படுத்திய கார் ஒட்டுநர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜஹாஸ்பூர் பகுதியில் முகமது ஷெரீப் என்பவருக்கு சொந்தமான காய்கறி வண்டி மீது, சீதாராம் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாரதவிதமாக மோதியுள்ளது. இதில் காய்கறி வண்டி முற்றிலும் சேதமடைந்ததால், ஆத்திரமடைந்த வியாபாரிகள், சீதாராமை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சீதாராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், முகமது ஷெரீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் 10 பேர் மீது வழக்குப்பதிந்த நிலையில், மதக்கலவரமாக மாற வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்