உண்டியலில் காசு இல்லாததால் ஆத்திரம்... விநாயகரையே திருடி சென்ற கொள்ளையர்கள்...

x

சேலம் அருகே கோயிலில் திருட வந்த மர்மநபர்கள் உண்டியலில் சில்லரை நாணயங்கள் மட்டுமே இருந்ததால் ஆத்திரத்தில் சாமி சிலையையே திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் அம்மாள் ஏரி பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் உண்டியலில் உள்ள பணத்தை திருடி உள்ளனர். அப்போது, உண்டியலில் சில்லரை நாணயங்களே இருந்ததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் விநாயகர் சிலையையும் சேர்த்து திருடி சென்றுள்ளனர். மறுநாள் கோவிலில் சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த பொது மக்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்