மின் கம்பி மீது உரசிய இரும்பு தகடு.. நொடியில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் - விழுப்புரம் அருகே நேர்ந்த சோகம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்பாண்டியன். முதுகலை பட்டதாரியான இவர், தனது வீட்டிற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை புணரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கொட்டகையில் இருந்த இரும்பு தகடை இளைஞர் தூக்கி சென்றபோது, அருகில் இருந்த மின்கம்பி தகடின் மீது உரசியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்டார். உடனே, அக்கம்பக்கத்தினர் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், வரும் வழியிலே இளைஞர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முதுகலை இளைஞரின் இந்த பரிதாப மரணம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com