தஞ்சையில் மதுவால் உயிரிழந்த விவகாரம்.."சயனைடு - சமூக விரோதியான வார்த்தை.." "தற்கொலை கிடையாது"

x

தஞ்சாவூர் மாவட்ட அரசு மருத்துவமனை பிணவறை முன்பு, உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் வழங்க வேண்டும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களுடன் கோட்டாட்சியர் பழனிவேல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் வேலை பார்த்த மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார். பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகிய 2 பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்