வடலூர் ராமலிங்கர் நினைவு தினம்... "பிப்ரவரி 5ம் தேதி மது விற்பனைக்கு தடை" - கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

x

வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை மதுபான கடைகளை மூட, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வித மதுபான கடைகள் மற்றும் பார்களில், வரும் 5ம் தேதி மது விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும், தடையை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்