மதுரை வந்த ஈபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த அதிமுகவினர்

x

மதுரையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் படங்களுடன் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பேனர், சமூக வலைத்தங்களில் பரவி வருகிறது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மதுரை வந்துள்ள அதிமுக எடப்பாடி பழனிசாமி வரவேற்க, விமான நிலையத்தில் இருந்து திருமங்கலம் டோல்கேட் வரை அதிமுக நிர்வாகிகள் பேனர்கள் வைத்துள்ளனர். அவற்றில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனரில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரது புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இரு துருவங்களாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், இந்த வரவேற்பு பேனரின் படம், சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்