அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகர்... சென்னையில் அதிர்ச்சி

x

சென்னையில், வட்டிப் பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. சென்னை, சாலிகிராமத்தில் ஞானசேகர் என்பவர் பிளம்பிங் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு அதிமுக பிரமுகர் வெங்கடேஷ் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாள்களாக ஞானசேகர் சபரிமலைக்கு சென்றதால் வட்டிப் பணம் செலுத்த முடியாத சூழல் இருந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், ஞானசேகரின் கடைக்குச் சென்று அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தலைமறைவாகவுள்ள வெங்கடேஷை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்