ஓ.பி.எஸ். கூட்டத்தில் பறந்த அதிமுக கொடி
ஈரோடு மாவட்டம் பவானியில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் நடத்தும் செயல்வீரர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க கொடி பயன்படுத்தியதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. காடையாம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க சின்னம் பொருந்திய கொடி மற்றும் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கட்சியில் இல்லாதவர்கள் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்துவதாக பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், திருமண மண்டபத்தில் வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் சாலையோரம் அமைக்கப்பட்ட கொடிக் கம்பங்களை போலீசார் அகற்றினர்
Next Story
