எம்ஜிஆர் பிறந்த நாள் வாழ்த்து சுவரொட்டியில் கட்சியை காப்பாற்றுங்கள் என அன்வர் ராஜா ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு

x

எம்ஜிஆர் பிறந்த நாள் வாழ்த்து சுவரொட்டியில் கட்சியை காப்பாற்றுங்கள் என அன்வர் ராஜா ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு


எம்ஜிஆர் பிறந்த நாள் வாழ்த்து சுவரொட்டியில் கட்சியை காப்பாற்றுங்கள் என அன்வர் ராஜா ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர்-ன் 106 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். இதில் முன்னாள் எம்பி அன்வர் ராஜா சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் "அதிமுக கட்சி தலைவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள நீதிமன்றங்களில் போராடும் நிலையில், கட்சியைக் காப்பாற்ற உங்களிடம் மன்றாடுகின்றோம்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு தீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தில் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அன்வர் ராஜா தரப்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்