"ஆப்கன் டி20 கேப்டன் ரஷித் கான்..." - ஆப்கன் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு | afghanistan

x

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டு உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்து வெளியேறியதால் கேப்டனாக இருந்த முகமது நபி பதவி விலகினார். இந்நிலையில், டி20 போட்டிகளுக்கு ரஷித் கானை கேப்டனாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்து உள்ளது. இதனிடையே, கேப்டன்ஷிப் குறித்து பேசிய ரஷீத் கான், மிகப்பெரிய பொறுப்பு தன்னிடம் வந்து சேர்ந்துள்ளதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்