நட்புன்னா என்னன்னு தெரியுமா..? பாண்டிச்சேரியை கலக்கிய விஜய் அஜித் ரசிகர்களின் செயல்

x

புதுச்சேரியில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இணைந்து சுமார் 25 அடி உயரத்திற்கு கட்-அவுட் அமைத்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு வாரிசு, துணிவு ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. அஜித், விஜய் ரசிகர்களும் தங்கள் விருப்ப நாகயகனின் படத்தைக் காண தயாராக காத்திருக்கின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் அஜித் மற்றும் விஜய் ஆகியோரது ரசிகர்கள் இணைந்து கட்-அவுட் அமைத்துள்ளனர். மேலும், இரு படங்களும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்து தெரிவித்து பேனர்கள் வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்