அடுத்தடுத்து அதிமுகவில் இணையும் அமமுக நிர்வாகிகள்.. TTV தினகரனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

x

அ.ம.மு.க.வில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி விலகி, அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். அமமுகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி, அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அண்மையில், தஞ்சை தெற்கு மாவட்டச்செயலாளர் மா.சேகர் அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.ம.மு.க முக்கிய நிர்வாகியுமான திருச்சி ஆர்.மனோகரன், கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், அ.தி.மு.க.வில் இன்று இணைந்தார். ஏற்கனவே கோமல் அன்பரசன், கே.கே.உமாதேவன், டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்