ரஷ்ய உளவாளியாக மாறிய திமிங்கலம்? மனிதர்களுடன் பழகி ரகசியங்களை கறக்கும்... எப்படி சாத்தியம்?.. நடுங்கும் எதிரி நாடுகள்

x

வெண் திமிங்கலத்தை உளவாளியாக பயன்படுத்துவதாக ரஷ்யா மீது மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது ஸ்வீடன்... இதன் பின்னணி குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு...

பார்ப்பதற்கு க்யூட்டாகவும், கண்ணைக்கவரும் வெண்மை நிறத்திலும் காணப்படும் பெலுகா வகை திமிங்கலங்கள் மனிதர்களிடம் எளிதில் பழகக்கூடியவை.

இந்த வகை திமிங்கலங்கள் ஆர்க்டிக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன..

ஆனால், இந்த அழகான திமிங்கலத்தைப் பார்த்தாலே அஞ்சுகிறார்கள் ஸ்வீடன் மக்கள்..

ஆம், 2019 ஆம் ஸ்வீடனின் வடக்கு பகுதியான பின்மார்

கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த பெலுகா வகை திமிங்கலம் ஒன்றின் கழுத்து பகுதியில் ஒருவித பெல்ட் இருந்ததும் அதில் ஒரு சீக்ரெட் கேமரா பொருத்தப்படிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது..

இந்த திமிங்கலம், ரஷ்ய கடற்படையினரால் பயிற்சி அளிக்கப்பட்டு உளவு பார்ப்பதற்காக ஸ்வீடன் கடற் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்று ஸ்வீடன் திடமாக நம்பியது. அன்று முதல் ஸ்வீடன் மக்கள் பெலுகா திமிங்கலத்தை ஒரு வித அச்சத்துடனே பார்த்து வருகின்றனர்.

அவ்வப்போது இருப்பிடத்தை மாற்றி கொண்டு வந்த இந்த பெலுகா திமிங்கலம் தற்போது மெல்ல மெல்ல நகர்ந்து ஸ்வீடனின் தென்மேற்கு கடற்கரையில் ஹன்னெபோஸ்ட் ராண்டில் தென்பட தொடங்கியிருக்கிறது...

இது தொடர்பாகக் கடல் சார் ஆய்வாளர் செபாஸ்ட்டியன் ஸ்ட்ராண்ட் கூறுகையில், "மெதுவாகச் சென்று கொண்டிருந்த அந்தத் திமிங்கலம் திடீரென ஏன் வேகமெடுத்தது எனத் தெரியவில்லை. என்றும் கடலில் அது இவ்வளவு விரைவாக நீந்துவது என்பது புதிராகவே உள்ளது என்றும் கூறியுள்ளார்...

அதேசமயம் இந்த பெலுகா திமிங்கலத்திற்கு 13, 14 வயது இருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் அதன் உடலில் ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கும் என்பதால் தனக்கு துணையைக் கண்டுபிடிக்க வேகமாக நகர தொடங்கியிருக்க லாம் என்றும் கூறுகிறார்...

4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெண் திமிங்கலம் ஸ்வீடன் கடல் பகுதியில் உலாவருவதன்

மூலம் ரஷ்யா உலவு பார்ப்பதாக மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது ஸ்வீடன்.

ஆனால், ஸ்வீடனின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ரஷ்யா அதிகாரபூர்வமாக பதில் ஏதும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்