நள்ளிரவில் சென்னை மெரினாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | chennai | marina | thanthi tv

x

சென்னை மெரினா கடற்கரையில், தூங்கிக் கொண்டிருந்தவர்களை கத்தியால் தாக்கி செல்போன், பணம் பறித்ததாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தெலங்கானாவை சேர்ந்த பீமாராவ், சென்னையை சேர்ந்த சமீர் ஆகியோர் மெரினா கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த போது, கத்தியால் தாக்கிய கும்பல், செல்போன், இரண்டாயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மெரினா போலீசார், மாட்டான் குப்பம் பகுதியில் பதுங்கி இருந்த நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்