சீனா - பாகிஸ்தான் இடையே கையெழுத்தான ரகசிய ஒப்பந்தம்.. மெகா பிளானுக்கு அச்சாரம்..!

x

பாகிஸ்தானில் 82 ஆயிரத்து 415 கோடி ரூபாய்க்கு ரயில் இணைப்பு உட்கட்டமைப்பை ஏற்படுத்த பாகிஸ்தான்-சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

வர்த்தக முக்கியத்துவம் பெற்ற அரபிக்கடலுடன் நேரடி தொடர்பை கொண்டிருக்க சீனா-பாகிஸ்தான் பொருளாதார சாலை திட்டத்தை 5 லட்சத்து 10 ஆயிரத்து 790 கோடி ரூபாயில் சீனா மேற்கொள்கிறது. பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தையும், சீனாவின் மேற்கு பகுதியையும் இணைப்பதற்கு பாகிஸ்தானில் பல்வேறு உள்கட்டுமான பணிகளை சீனா மேற்கொள்கிறது. இப்போது இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக கராச்சி நகரிலிருந்து பெஷாவருக்கு ஆயிரத்து 554 கிலோ மீட்டருக்கு ரயில் இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் இருதரப்பு இடையே இறுதி செய்யப்பட்டுள்ளது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நவம்பர் தொடக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், உயர்மட்ட குழுவுடன் சீனா செல்லும் போது 82 ஆயிரத்து 415 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்