விருதுகளை குவித்து கொண்டே செல்லும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்

x

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 28-வது க்ரிடிக்ஸ் சாய்ஸ் விருது வழங்கும் நிகழ்வில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வசூல் ரீதியாக இமாலய வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு, உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் க்ளோப் விருது, இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக வழங்கப்பட்டது. இதே போன்று முக்கிய விருதாக கருதப்படும் க்ரிடிக்ஸ் சாய்ஸ் என அழைக்கப்படும் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில், ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு சிறந்த வேற்று மொழிப் படத்திற்கான விருதும், நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருதும் கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்