நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் - திடீரென வந்த வெடிகுண்டு மிரட்டல்...

x

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 240 பயணிகளுடன் கோவா நோக்கி புறப்பட்ட விமானம் வெடிகுண்டு மிரட்டலால் இன்று அதிகாலை உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

தெற்கு கோவாவில் உள்ள டபோலிம் விமான நிலையத்தில் அதிகாலை 4.15 மணிக்கு விமானம் தரையிறங்க திட்டமிடப்பட்டது.


அஸூர் ஏர் மூலம் இயக்கப்படும் விமானம் இந்திய வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பு திருப்பி விடப்பட்டது.


தபோலிம் விமான நிலைய இயக்குனருக்கு நள்ளிரவு 12:30 மணிக்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாக மிரட்டல் மின்னஞ்சல் வந்ததால் விமானம் திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்