விறு விறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டில் சோகம்... திடீரென மாடு முட்டியதால் போட்டியை காண வந்த 15 வயது சிறுவன் உயிரிழப்பு

x

தர்மபுரி அடுத்த தடங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மூன்றாம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் 700 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் அடக்கினர்.

இதனிடையே 7-வது சுற்று முடிவில் ஜல்லிக்கட்டை காண வந்த, கோகுல் என்ற சிறுவனை மாடு முட்டியது.

இதில் பலத்த காயமடைந்த சிறுவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்து பார்த்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.


Next Story

மேலும் செய்திகள்