90ஸ், 2K இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்... காதலி இல்லையா?.. இனிமேல் நோ டென்ஷன் - தேடி வரும் 'வாடகை காதலி' - இதுதான் லிங்க்

x

சிங்கிள்களாக இருக்கும், இளைஞர்களின் துயரத்தை போக்க காதலன், காதலிகளை வாடகைக்கு வைத்துக் கொள்ள புதிய வசதி அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜப்பானில். அது குறித்த சுவாரஸ்ய தவலை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

90ஸ் கிட்ஸ், 2 கே கிட்ஸ்கள் பலருக்கும் உள்ள பிரதான கவலை தங்களுக்கு ஒரு நல்ல காதலன், காதலி கிடைக்க வில்லை என்பதுதான். அப்படியே கிடைத்தாலும், அந்த உறவு நீண்ட காலம் நீடிக்காமல் பிரேக்கப் ஆகி விடுகிறது என்பது மற்றொரு கவலை.

கஷ்டப்பட்டு கரெக்ட் செய்த காதலியை தக்கவைக்க, கண்ணே, மணியே , உயிரே என கவிதை பேசி, தூக்கத்தை தொலைத்து, பணத்தை இழந்து, நேரத்தை விரயமாக்கி, பொய்பேசி, ஏமாற்றி, ....இப்படி எத்தனை சமரசம் செய்ய வேண்டியிருக்கும் என்பது காதலர்களுக்கே வெளிச்சம்...

ஆனால், இப்படி எந்த தொல்லையிலும் இல்லாமல் அரசாங்கமே நாம் நினைத்த நேரத்தில் காதலியை ஏற்பாடு செய்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ...ஆம் நம்பித்தான் ஆக வேண்டும்...அப்படி ஒரு விநோத திட்டத்தை தொடங்கியுள்ளது ஜப்பான் அரசு....

ஆம், ஜப்பானில் இனி காதலன், காதலி இல்லாதவர்கள் இணையதளத்தின் மூலம் தங்களுக்கு தேவையான இணையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இதற்காக அரசே ஒரு இணையதளத்தை தொடங்கியுள்ளது.

இணையை ஒரு மணி நேரம் வாடகைக்கு எடுக்க 3000 ரூபாய் செலுத்த வேண்டும். ஸ்பெஷல் இணையை தேர்வு செய்ய வேண்டுமெனில் அதற்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டும்.

இதற்காக இணையத்தை நாடுபவர்கள், வயது, சம்பளம் உள்ளிட்ட இன்ன பிற விபரங்களையும் அதில் பதிவு செய்ய வேண்டுமாம்...அந்த தரவுகள் சரி பார்க்கப்பட்ட பின்னர் இணைகளை வாடகைக்கு எடுக்க அனுமதிக்கபடுவார்கள்.

அரசின் முடிவு இளைஞர்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும் என்று கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், ஜப்பான் அரசு இந்த திட்டத்தை ஏன் முன்னெடுக்கிறது என்ற சுவாராஸ்ய தகவலும் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் ஏராளமான இளைஞர்கள் தனிமையில் தவித்து வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதனால் படிப்பு, வேலை என வெவ்வேறு நகரங்களுக்கு செல்லும் இளைஞர் கள் ஒரு வித மன சோர்வுக்கு ஆளாகி உள்ளதாகவும்,

இந்த சோர்வு அவர்களின் கல்வி, வேலை, குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

துணை இல்லாமல், தனிமையில் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை தவிர்க்கவே இந்த முடிவு என்கின்றது ஜப்பான் அரசு

ஜப்பானின் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், அரசின் இந்த முன்னெடுப்பு தவறான முன்னுதாரணம் என்றும் வாடகை இணை என்பது ஒரு தற்காலிக தீர்வாக இருக்கலாம் ஆனால் அது அரசுக்கு வேறு வகையான சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்