வலிப்பு ஏற்பட்டு 4 மாத குழந்தை உயிரிழப்பு.. "காவல்துறைதான் காரணம்.." கதறிய தம்பதிகள்..

x

நெல்லையில் உயிரிழந்த கைக்குழந்தையுடன் காவல் ஆணையர் அலுவலகம் வந்த தம்பதி, குழந்தை இறப்பிற்கு காவல்துறை மீது புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை கீழ வீரராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவர் தன் 4 மாத குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காவல் ஆணையர் அலுவலகம் சென்ற முகேஷ், தன் குழந்தையின் இறப்பிற்கு காவல்துறை தான் காரணம் என புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு தன் மீதும், தன் மனைவி மீதும் பொய்யாக பண மோசடி புகாரளிக்கப்பட்டது எனவும், அப்போது தன் மனைவி கர்ப்பமாக இருந்ததால் காவல்துறை கொடுத்த மன அழுத்தத்தினால் குழந்தையை சரிவர கவனிக்க முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குழந்தையின் உயிரிழப்பிற்கு காவல்துறை கொடுத்த மன அழுத்தமே காரணம் என புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்