கடலில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயம்....ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேட அரசுக்கு கோரிக்கை

x

ராமேஸ்வரம் அருகே கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால், ஹெலிகாப்டர் மூலமாக தேட அரசுக்கு சகமீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இருந்து, சுமார் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்வளத்துறை அனுமதி பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பெரும்பாலான அனைத்து படகுகளும் கரைக்கு திரும்பிய நிலையில், ஆல்வின் என்பவருக்கு சொந்தமான படகு மட்டும் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. அந்த படகில் இருந்த 4 மீனவர்களை சக மீனவர்கள் தேடிச்சென்ற நிலையில், அவர்களை கண்டறிய முடியாததால் சக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் உடனடியாக ஹெலிகாப்டர் மூலமாக அவர்களை தேட வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்