ரயில் முன் பாய்ந்த 24 வயது இளைஞர்.. போலீசார் விசாரணை திடுக் தகவல்

ரயில் முன் பாய்ந்த 24 வயது இளைஞர்.. போலீசார் விசாரணை திடுக் தகவல்
Published on

தீராத தலைவலி காரணமாக இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, வாமடம் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான பிரேம்குமார். இவர் தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நிலையில், கோட்டை ரயில் நிலையம் முன்பாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அளவு கடந்த தலைவலி காரணமாக பிரேம்குமார் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com