ஸ்கிப்பிங் செய்து 2 கின்னஸ் ரெக்கார்ட் - சாதித்த "ஸ்கிப் மேன்"

x

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரியான் அலோன்சோ என்ற இளைஞர், ஜம்ப் ரோப் எனப்படும் ஸ்கிப்பிங் செய்து 2 கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடித்துள்ளார்.

35 வயதான ரியான் அலோன்சோ, 3 ஆயிரத்து 731 ஜம்ப் ரோப் கிராஸ்ஓவர்களை தொடர்ச்சியாக முடித்ததாக கின்னஸ் அவருக்கு சான்றளித்தது.

மேலும், 12 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 980 டபுள்-அண்டர் ஸ்கிப்பிங்கை நிகழ்த்தி, 2வது கின்னஸ் உலக சாதனையையும் அலோன்சோ படைத்துள்ளார்.

ஸ்கிப்பிங்கில் 2 கின்னஸ் சாதனைகளில் இடம்பிடித்த இளைஞருக்கு "ஸ்கிப்மேன்" என்ற சிறப்பு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்