"அப்பா இறந்த 52ம் நாள் அம்மாவ கொன்னாங்க...எங்களையும் கொன்னுடுவாங்கனு பயமா இருக்கு" - பதறியடித்து ஓடிவந்த சிறுமிகள்

x

தாய் மற்றும் தந்தையை இழந்த 2 சிறுமிகள் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு கேட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கன்னியாகுமரி மாவட்டம், மணக்கரை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் அய்யன் கோபுவின் மகள்கள் இருவரும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்தனர். ராணுவ வீரரான தங்கள் தந்தை இறந்த பிறகு எல்லை பாதுகாப்பு படையில் இருந்து வந்த பணம் மற்றும் சொத்து தொடர்பாக நடந்த தகராறில், தங்களுடைய தாயை, தாத்தா ஆறுமுகம், தந்தையின் சகோதரர் மது ஆகியோர் அடித்து கொலை செய்ததாக மனுவில் தெரிவித்துள்ளார். தற்போது பணம், சொத்துக்காக தங்களையும் தந்தையின் குடும்பத்தினர் கொலை செய்து விடுவார்களோ என்ற அச்சம் உள்ளதாகவும், தங்களுடைய உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்