நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன்

x
  • பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
  • நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்,
  • தானே மாவட்டத்தில் உள்ள ஷஹாபூரில் இருந்து அழைப்பு வந்தது, தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இதையடுத்து, 16 வயது சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
  • நடிகருக்கு மிரட்டல் விடுத்த சிறுவனின் நோக்கத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மின்னஞ்சல் மூலம், சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்