15 ஆயிரம் கிலோ எடை - 4 கோடியில் உலகிலேயே உயரமான நடராஜர் சிலை

x

உலகிலேயே மிகவும் உயரமான15 ஆயிரம் கிலோ எடை கொண்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான பிரமாண்ட நடராஜர் சிலை வேலூரை வந்தடைந்தது.

அரியூர் நாராயணி தங்க கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக, சுவாமி மலையில் பஞ்சலோகத்தைக் கொண்டு, 23 அடி உயரம் 17 அடி அகலம் கொண்ட நடராஜர் சிலை உருவாக்கப்பட்டது.

லாரி மூலம் வேலூர் கொண்டுவரப்பட்ட இந்த சிலைக்கு வழிநெடுகிலும் மேளதாளங்கள் முழங்க, மலர்களை தூவி பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்