விஜய் போல் பறந்து வந்த இளம்பெண்.. கர்நாடக பெண்ணின் வைரல் வீடியோ

x

சர்கார் பட பாணியில் அமெரிக்காவில் இருந்து பெங்களூருக்கு வந்து இளம்பெண் ஒருவர் ஜனநாயக கடமை ஆற்றியுள்ளார். இது குறித்து ஒரு செய்தி தொகுப்பு...

சர்கார் படத்தில் அமெரிக்கா வாழ் தமிழராகவும், பெருநிறுவனத்தின் சி.இ.ஓவாகவும் நடித்த விஜய், சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை வருவது போன்று ஏ.ஆர். முருகதாஸ் காட்சி அமைத்திருப்பார்.

இந்த காட்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். நிஜத்தில் அரிதாக இருந்தாலும், இதுபோன்றதொரு சுவாரஸ்ய நிகழ்வுதான் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் நிகழ்ந்துள்ளது.

பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் பிரியங்கா அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து வரும் நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்வதற்காக கல்லூரிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு பெங்களூரு பறந்திருக்கிறார் பிரியங்கா...


Next Story

மேலும் செய்திகள்