தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்

x

2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி, அரசு செயலாளர்களில் 7 விழுக்காடு மட்டுமே ஓபிசி, தலித், ஆதிவாசி மக்கள் இருப்பதாக தெரிவித்தார். ஓபிசி மக்களின் வளர்ச்சி குறித்து பேசும் பிரதமர் மோடி, புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இல்லாவிட்டால், ஓபிசி மக்களை அவமதிப்பது போன்று ஆகும் என்றும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களுக்கு செய்யும் அநீதியாகும் என்றும் கூறினார். இந்த சமூக மக்கள் அதிக அளவில் இருந்தும், அரசு வேலைகளில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்றும், மக்கள் தொகைக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்