"எங்கே முடிந்தால் இதை செய்து காட்டுங்கள்... ஆனால்.." பாஜகவுக்கு சவாலுடன் நிபந்தனை வைத்த பிரியங்கா - அனல் தெறிக்கும் கர்நாடக தேர்தல்

x

ஒரு தேர்தலில் மக்கள் பிரச்சினையை பேசி மோதுங்கள் பார்க்கலாம் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சவால் விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சிந்தாமணியில் பிரசாரம் செய்த பிரியங்கா காந்தி பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். நாட்டின் எந்தஒரு மாநிலத்திலாவது தேர்தலில் மக்கள் பிரச்சினையை பேசி மோதுங்கள் பார்க்கலாம் என பிரதமர் மோடி, பாஜக அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுக்கு சவால் விடுத்தார். அப்படி மோதும் மாநிலத்தில் பாஜகவினர் கடந்த கால கதைகளை பேசக்கூடாது அல்லது மக்களை அவர்களுக்கு உள்ளே சண்டையிட்டுக்கொள்ள செய்யக்கூடாது எனவும் பிரியங்கா காந்தி நிபந்தனைகளை குறிப்பிட்டார். மக்களுடைய பிரச்சினை விலைவாசி உயர்வு, ஏழ்மை மற்றும் வேலையின்மை என பட்டியலிட்ட பிரியங்கா காந்தி, கர்நாடகாவில் ஆட்சி செய்த பாஜகவால் மக்கள் முன்பு தலைக்காட்ட முடியவில்லை எனவும் பேசவும் முடியவில்லை எனவும் விமர்சித்தார். கர்நாடகாவில் மாற்றம் என்பது உறுதியானது எனவும் பிரியங்கா காந்தி பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்