ஜெகதீஷ் ஷெட்டர் விலகல் - கர்நாடகாவில் பாஜகவுக்கு பின்னடைவு

x

காங்கிரசில் இணைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஷெட்டர், கர்நாடக பாஜகவை கட்டமைத்த தமக்கு அவமதிப்பு தான் கிடைத்து எனவும் பாஜக மூத்த தலைவர்களை மதிப்பது இல்லை எனவும் குற்றம் சாட்டினார். 7 ஆவது முறையாக தனது ஹூப்ளி -தார்வாட் மத்திய தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் குறிப்பிட்டார். ஜெகதீஷ் ஷெட்டர் மாநிலத்தில் பாஜக வாக்கு வங்கியாக பார்க்கப்படும், லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர். ஏற்கனவே பாஜக சீட் வழங்காததால் லிங்காயத்து தலைவர் லட்சுமண் சவதி காங்கிரசுக்கு சென்ற நிலையில், ஷெட்டரும் காங்கிரஸ் சென்றிருப்பது பாஜகவுக்கு பின்னடைவாக அமையும் எனவும் காங்கிரசுக்கு வலுசேர்க்கும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்