மீண்டும் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. ஆட்டம் இந்தியா பக்கம் தான் ஆனால்.. அதிர்ஷ்டமோ ஆஸி.க்கு.. சோகத்தில் உடைந்த ரசிகர்கள்

x
  • 5 முறை மகளிர் டி20 சாம்பியன், நம்பர் ஒன் டி20 அணி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஒற்றைத் தோல்வி இல்லை...
  • இத்தகைய அடையாளங்களுடன் அரையிறுதிக்கு வந்த ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு, முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி ரன் கணக்கை தொடங்கி வைத்தார் அலைசா ஹேலி...
  • மறுமுனையில் பெத் மூனியும் நேர்த்தியாக விளையாட, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 52 ரன்கள் சேர்த்தது.
  • அலைசா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் மெக் லேனிங், மூனியுடன் ஜோடி சேர்ந்து ரன் ரேட்டை உயர்த்தினார்.
  • இவர்கள் இருவர் அளித்த கேட்ச்சுகளையும் இந்திய வீராங்கனைகள் கோட்டைவிட, இருவரும் வாய்ப்புகளை கட்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
  • மூனி அரைசதம் அடித்த வேகத்தில், ஷிகா பாண்டே பந்துவீச்சில் வெளியேறினார். ஆனால் அடுத்து வந்த கார்ட்னர் quickfire இன்னிங்ஸ் ஆடினார். கடைசிக் கட்டத்தில் அதிரடி காட்டினார் ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங்...
  • கடைசி ஓவரில் ரேணுகா சிங், புல்-டாஸ்களை பரிசளிக்க, மெக் லேனிங் சிக்சர்களைப் பறக்க விட்டார்.. கடைசி ஓவரில் மட்டும் 18 ரன்கள் திரட்டப்பட்டதால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 172 ஆக உயர்ந்தது.
  • அடுத்து கடினமான இலக்கை நோக்கி இன்னிங்ஸை தொடங்கிய இந்தியாவிற்கு ஆரம்பமே அதிர்ச்சி...
  • நம்பிக்கை நட்சத்திரங்களான மந்தனாவும் சஃபாலி வெர்மாவும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்., அடுத்து வந்த யாஸ்திகாவும் அவர்களைப் பின்தொடர்ந்தார்.
  • என்றாலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி பவுண்டரிகளைப் பறக்கவிட்டு, அணியை சரிவில் இருந்து மீட்டது.
  • ஜெமிமாவின் கிளாசிக்கல் ஷாட்களாலும், ஹர்மன்ப்ரீத்தின் அதிரடியாலும் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 10 ஓவர்களில் 93 ரன்கள் குவித்தது இந்தியா...
  • ஆட்டம் இந்தியா பக்கம் இருந்தபோது, அதிர்ஷ்டம் ஆஸ்திரேலியா பக்கம் சென்றது.
  • 11வது ஓவரில் ஜெமிமா அவுட் ஆக, 14வது ஓவரில் ஹர்மன்ப்ரீத் கவுர் துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். கிரீஸிற்கு (crease) முன்பாக ஹர்மன்ப்ரீத்தின் பேட் ஸ்டக் (stuck) ஆனதால் பரிதாபமாக ரன் அவுட் ஆகி, சீற்றத்துடன் வெளியேறினார் ஹர்மன்ப்ரீத் கவுர்..
  • ஹர்மன்ப்ரீத் கவுரின் ரன் அவுட் தான் ஆட்டத்தில் திருப்புமுனை... அதற்குப் பிறகுதான் ஆட்டம் ஆஸ்திரேலிய பக்கம் மாறியது.
  • அடுத்து வந்தவர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது, 10 ரன்களை மட்டுமே இந்தியா எடுக்க, 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது ஆஸ்திரேலியா....
  • மட்டுமின்றி தொடர்ச்சியாக 7வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி தாங்கள் அசைக்க முடியாதவர்கள் என நிரூபித்து உள்ளனர் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்...
  • சுமாரான பீல்டிங், கடைசி ஓவரில் ரன்களை வாரி வழங்கியது, முன்வரிசை வீராங்கனைகளின் சொதப்பலான ஆட்டம் என இந்தியாவின் கோப்பைக் கனவு தகர்ந்ததற்கு காரணங்களை அடுக்கலாம்...
  • கடந்த மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்ட இந்தியா,,, இம்முறை அதே ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோற்று, ரசிகர்களின் இதயங்களை மீண்டும் சுக்குநூறாக்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்