ஆகஸ்ட் 1 To ஜனவரி 30.. சொன்னதை செய்த லோகேஷ் கனகராஜ் - மாஸ் சம்பவம் Loading..!

x

விஜய் - லோகேஷ் கனகராஜ் - அனிருத் கூட்டணியில் 'தளபதி 67' படம் உருவாவது உறுதியாகியுள்ளது.

விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைவதாக தகவல் வெளியானதில் இருந்தே, 'தளபதி 67' இணையத்தில் பேசுபொருளானது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், மாலை 6.07 மணிக்கு தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதன்படி, விஜய் - லோகேஷ் கனகராஜ் - அனிருத் மீண்டும் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தை வாரிசு படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தரான SEVEN SCREEN STUDIOS நிறுவனம் தயாரிக்கிறது.


விஜய்யுடன் மீண்டும் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக லோகேஷ் கனகராஜ் நெகிழ்ந்துள்ளார்.

விக்ரம் பட வெற்றிக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இணையத்தில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், தளபதி 67 படப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான உடன் படப்பிடிப்பில் விஜயுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.


தளபதி 67 திரைப்படம் அணு ஆயுதம் போன்று வெடிக்கும் என அனிருத் மகிழ்ந்துள்ளார்.

மீண்டும் விஜய் - லோகேஷ் கனகராஜுடன் இணைந்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அனிருத், இனி பட்டாசுதான் என நெகிழ்ந்துள்ளார்.


தளபதி 67 படம் LCU-வில் இணையுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கைதி படத்தை தொடர்புப்படுத்தி விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இனிவரும் படங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இருந்தால் LOKESH CINEMATIC UNIVERSE என போஸ்டரிலேயே வெளியிடுவேன் என குறிப்பிட்டிருந்தார்.

தற்போது வெளியாகியுள்ள தளபதி 67 அப்டேட்டில் எல்.சி.யூ குறித்து தகவல் வெளியாகவில்லை.

எனினும் டைட்டில் கார்டில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்