பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்..!

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்..!
x

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

வரும் 31-ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது.

தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தும், குடியரசு தின நிகழ்ச்சிகள் குறித்தும் பிரதமர் ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது.

அதோடு முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்