காவல் உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஒரு நாள் விடுப்பு - தமிழக அரசு

காவலர்களுக்கு வார விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது போல் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஓய்வு அளித்து தமிழக அரசு அரசு உத்தரவிட்டுள்ளது.
x

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே மாதம் 10-ம் தேதி காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகையில், போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்கப்படுவதுபோல், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஓய்வு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, டிஜிபி சைலேந்திர பாபுவும், அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்திருந்தார். அதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஓய்வு வழங்க ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்