இன்று டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சருடன் சந்திப்பு?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார்.
இன்று காலை 11:20 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்படுகிறார்.
இரண்டு நாள் பயணத்திற்கான காரணங்கள் குறித்து ஆளுநர் மாளிகை தகவல் தெரிவிக்கவில்லை.
அதே நேரத்தில், சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் குறித்து, திமுக குழு குடியரசுத் தலைவரை சந்தித்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையோ அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷாவையோ சந்திக்க வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, நாளை சனிக்கிழமை இரவு 8:15 மணிக்கு டெல்லியில் இருந்து அவர் சென்னை திரும்புகிறார்.
Next Story