"இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு" - பிரதமர் மோடி நம்பிக்கை
கச்சா உருக்கு உற்பத்தியை அடுத்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் ஆர்ஸ்லர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் ஹசீரா ஆலை விரிவாக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, உருக்கு ஆலையின் மூலம் முதலீடு அதிகரிப்பதுடன், ஏராளமான புதிய வாய்ப்புகளுக்கு கதவுகளை திறக்கும் என்று பிரதமர் கூறினார். 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடு குஜராத் மற்றும் நாட்டின் இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவித்தார். இந்த விரிவாக்கத்திற்கு பின்னர் ஹசீரா ஆலையின் கச்சா உருக்கு உற்பத்தி திறன் 9 மில்லியன் டன்னில் இருந்து 15 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.